குத்துச் சண்டை வீரரான மார்வெலஸ் மார்வின் ஹாக்லர் காலமானார்

நவீன சகாப்தத்தின் கடினமான மற்றும் மிகவும் பிரியமான குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான, மறுக்கமுடியாத முன்னாள் மிடில்வெயிட் சாம்பியன் மார்வெலஸ் மார்வின் ஹாக்லர் சனிக்கிழமை தனது 66 ஆவது வயதில் காலமானார்.

அவரது மரணத்திற்கு உத்தியோகபூர்வ காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றாலும், ஹாக்லரின் மனைவி கே ஜி. ஹாக்லர், தனது மறைந்த கணவரின் பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் ஒரு பதிவுடன் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“மிகவும் சோகமான அறிவிப்பை வெளியிட்டதற்கு வருந்துகிறேன். இன்று துரதிர்ஷ்டவசமாக என் அன்பான கணவர் மார்வெலஸ் மார்வின், நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள அவரது வீட்டில் எதிர்பாராத விதமாக காலமானார்” எனத் தெரிவித்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு சர்வதேச குத்துச்சண்டை அரங்கில் புகழ் பெற்ற ஹாக்லர், 1980 முதல் 1987 வரை அவர் வைத்திருந்த மறுக்கமுடியாத மிடில்வெயிட் பட்டத்தினை தொடர்ச்சியாக 12 ஆவது முறையாகவும் பாதுகாத்தார்.

Sharing is caring!