குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் உறுதியாக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பூஜா ராணி, லவ்லினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இதற்கிடையே இன்று நடைபெற்ற பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் கொலம்பியா வீராங்கனை விக்டோரியா வேலன்சியாவை எதிர்கொண்டார். இதில் இந்தியாவின் மேரி கோமை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி கொலம்பியாவின் விக்டோரியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மேரி கோம், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!