டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் நீச்சல் போட்டியில் கனடா அணிக்கு வெள்ளிப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம் வென்ற கனடா அணி…டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த பெண்களுக்கான நீச்சல் போட்டியில் கனடா அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

கனடாவின் Penny Oleksiak தலைமையிலான இந்த அணி 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் 3:32.78 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அவுஸ்திரேலியா அணி 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்துள்ளது.

அமெரிக்க அணி (3:32.81) 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கனடாவின் பதக்கப் பட்டியலில் முதலாவதாக இடம் பிடித்துள்ளது Penny Oleksiak தலைமையிலான இந்த அணி.

Sharing is caring!