சதமடித்த கேப்டன்… திணறும் இலங்கை! முதல் இன்னிங்ஸில் ஓட்டங்களை குவித்த வங்க தேசம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்க தேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 474 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 21ம் திகதி Pallekele மைதானத்தில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற வங்க தேச அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

Najmul Hossain Shanto 126 ஓட்டங்களுடன், Haque 64 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் தொடர்ந்து துடுப்பபெடுத்தாடிய Najmul Hossain Shanto, Haque ஜோடி இலங்கை அணியை திணறடித்தது.

Najmul Hossain Shanto 163 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், சதமடித்த கேப்டன் Haque 127 ஓட்டங்களில் அவுட்டானார்.

போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் 2வது நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்க தேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 474 ஓட்டங்கள் குவித்துள்ளது.

முஷ்பிகுர் ரஹீம் 43 ஓட்டங்களுடனும், லிட்டன் தாஸ் 25 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

இலங்கை தரப்பில் பந்து வீச்சில் விஷ்வ பெர்னாண்டோ நேற்று இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று லஹிரு குமார, தனஞ்சய டி சில்வா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Sharing is caring!