மாற்றம் என்பது இலகுவாக நடைபெறும் என்கிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி

இந்திய அணியின் தற்போதைய அனுபவம் வாய்ந்த முன்னணி பந்துவீச்சுப் படை ஓய்வுபெறுகையில், அடுத்த பெளலர்கள் அணி தயாராக இருக்கிறது. மாற்றம் என்பது இலகுவாக நடைபெறும் என்றும் பேசியுள்ளார் இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

அவர் பேசியுள்ளதாவது, ‘எங்களிடமிருந்து பொறுப்புகளை எடுத்துக்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் எந்தளவிற்கு அதிக போட்டிகளை ஆடுகிறார்களோ, அந்தளவிற்கு அனுபவத்தைப் பெறுவார்கள்.

நாங்கள் ஆட்டத்திலிருந்து ஓய்வுபெறுகையில், பொறுப்பு மாற்றம் இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, ஒரு முக்கிய முன்னணி பந்துவீச்சாளர் ஓய்வு பெறுகையில், அணிக்கு பாதிப்பு ஏற்படாது.

அனுபவம் எப்போதுமே தேவையானது. புதிய வீரர்கள் அதை காலப்போக்கில் பெறுவார்கள். ஆஸ்திரேலியர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே சாய்ப்பது பெரிய சாதனை. அதை நாங்கள் இரண்டுமுறை செய்துள்ளோம். அதேசமயம், அந்த சாதனையை எந்த மூத்த பெளலர்களும் இல்லாமலேயே செய்துள்ளோம். இதன்மூலம் எங்களின் இளைஞர்கள் நம்பத்தகுந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றுள்ளார் ஷமி.

Sharing is caring!