மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.!!

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசன் 14வது போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று ஞ்சிய ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது. அதில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, டு பிளெசிஸ் – ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கிய களமிறங்கினர். முதல் ஓவரின் 5வது பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார் டு பிளெசிஸ்.

மொயின் அலி டக் அவுட், அம்பத்தி ராயுடு காயம் காரணமாக ரன் எடுக்காமல் வெளியேறினார். ரெய்னா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 3 விக்கெட்டுகளுக்கு 7 ரன்கள் எடுத்து சிஎஸ்கே தடுமாறிய நிலையில் களமிறங்கினார். ஆனால், அவரும் 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு சிறப்பாக ஆடிய ருதுராஜ் – 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினர். ஜடேஜா – 33 பந்துகளில் 26 ரன்கள், ப்ராவோ – 8 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து இருந்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி டி காக் 17 ரன்னுக்கும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சூரியகுமார் யாதவ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். போலார்ட் 15 ரன்களுக்கும், கருணாள் பாண்டிய 4 ரன்னுடம் ஆட்டமிழந்தனர். திவாரி தனது அரை சதத்தை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.

இதுவரை 30 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் 2 தோல்வி, 6 வெற்றிகள் என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 8 போட்டிகளில் 2 தோல்வி, 6 வெற்றிகள் என 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 போட்டிகளில் 2 தோல்வி, 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று, 4 போட்டிகளில் தோல்வியடைந்து 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

Sharing is caring!