நீரஜ் சோப்ராவுக்கு பரிசு அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் அவரை கவுரவப்படுத்தும் விதமாக 8758 (ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த தூரம் 87.58 மீட்டர் ஆகும்) என்ற எண் கொண்ட சிறப்பு சீருடை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!