சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவன தலைவர் காலமானார்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவருமான எல்.சபாரத்தினம் காலமானார்.

80 வயதான சபாரத்தினம் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்தார்.

காரைக்குடியில் பிறந்த எல்.சபாரத்தினம், செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல் இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.

கோரமண்டல் சுகர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஐசிஎல் நிதி சேவைநிறுவனம், ஐசிஎல் சிப்பிங் லிமிடெட், கோரமண்டல் எலக்ட்ரிக் நிறுவனம், ஐசிஎல் செக்யூரிட்டீஸ், பயோசிந்த் லைப் சயின்சஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர், இந்தியா சிமென்ட்ஸ் ஆலோசகர் என்று பல்வேறு பெரு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்து திறம்பட பணியாற்றியுள்ளார்.

சபாரத்தினத்தின் மனைவி ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில் தம்பதிக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!