விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய சென்னை அணி பிராவோ

பிராவோவின் வாத்தி கம்மிங் நடனம்… சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

14-வது ஐபிஎல் சீசனின் 8-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.

இந்த ஆட்டத்தில் பிராவோ பந்துவீச்சின்போது தமிழக வீரர் முருகன் அஸ்வின் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிராவோ மைதானத்தில் வாத்திங் கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!