இலங்கை வீரர்கள் இரண்டு பேரை ரிசர்வ் பிளேயர்களாக எடுத்த சென்னை அணி!

ஐபிஎல் தொடரில் சென்னை அணி, இலங்கை வீரர்கள் இரண்டு பேரை ரிசர்வ் வீரர்களாக எடுத்துள்ளது.

இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர் வரும் 9-ஆம் திகதி நடைபெறவுள்ளது, இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன,

குறிப்பாக இந்த முறை எப்படியாவது கோப்பை வென்றாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னை அணி உள்ளது.

வலைப்பயிற்சியில் தமிழக இளம் வீரர்கள் ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோர் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.


மேலும் சென்ற வருட நம்பிக்கை நட்சத்திரம் ருத்ராஜும் மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் சுரேஷ் ரெய்னாவை இந்த வருடம் தக்கவைத்துக்கொண்டு மட்டுமல்லாமல் ஏலத்தில் கிருஷ்ணப்ப கவுதம் , மோயின் அலி மற்றும் சட்டீஸ்வர புஜாரா போன்ற வீரர்களையும் சென்னை அணி வாங்கி அணியை பலப்படுத்தி இந்த வருடம் கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.

இந்நிலையில், மேலும் பலம் கூட்டும் வகையில், இலங்கையை சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள் மகேஷ் தீக்ஷனா மற்றும் மதீஷ பதிரனா ஆகியோரை ரிசர்வ் வீரர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரவழைத்துள்ளது.

இதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர்கள் இருவரும் அணியின் ஸ்குவாட்டில் இல்லையென்றாலும் ரிசர்வ் பிளேயர்ஸ்ஸாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Sharing is caring!