எங்கள் குடும்பத்தார் 10 பேருக்கு கொரோனா! தமிழக வீரர் அஸ்வின் மனைவி முக்கிய தகவல்

இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் குடும்பத்தார் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர் அஸ்வின் ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த நிலையில் திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் தெரிவிக்கையில், எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!