பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா..!!!

பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை அணி வீரர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோரும், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரான சமிந்த வாஸும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இம்மூவருக்கும் மேற்கொள்ளப்பட்ட முதல் பீசிஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் இரண்டாவது தடவையாக பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இருப்பினும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஏனைய வீரர்களுடன் இன்று (23) டாக்காவில் இலங்கை நேரப்படி 12.30 மணி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!