சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு கொரோனா

பயிற்சியாளருக்கு கொரோனா… சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

சென்ற மாதம் 21-ம் தேதி மும்பையில் ஒரே விடுதியில் சிஎஸ்கே அணியினரும், கொல்கத்தா அணியினரும் தங்கி இருந்தனர். அப்போது கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்த வீரர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனையில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மைக் ஹசிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்குத் தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் மீண்டும் நடத்திய சோதனையில் அவருக்குத் தொற்று சந்தேகம் இன்றி உறுதி செய்யப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sharing is caring!