பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டம் வென்றார். இவர் வெல்லும் முதல் கிரான்ஸ்ட்லாம் பட்மட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் பாரீஸ் நகரில் நடந்தது. இதில் ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டம் வென்றார். இது பார்போரா கிரெஜிகோவா வெல்லும் முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!