பிரபல பாலிவுட் நடிகையுடன் டேட்டிங்கா’? கொந்தளித்த ரவி சாஸ்திரி!

நடிகை நிர்மத் கவுர் உடனான டேட்டிங் குறித்த கேள்விக்கு, காரசாரமாக பதில் அளித்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்திய கிரிக்கெட் அணியையும், பாலிவுட் சினிமாவையும் எப்போதும் பிரிக்க முடியாது. அவை இரண்டும் வெவ்வேறு துறைகளாக இருந்தாலும், மக்கள் செல்வாக்கு, புகழ் போன்றவற்றில் ஒன்றோடொன்று தொடர்புடையது. குறிப்பாக, கிரிக்கெட் வீரர்களை நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கள் வெளியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு இப்படியொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகை நிர்மத் கவுர் என்பவரையும், இவரையும் இணைத்து கடந்த 2018 முதலே கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்த கேள்விக்கு அவர் இங்கிலாந்து தொடருக்கு கிளம்பும் முன்பு அளித்த பேட்டியில், தனது பாணியில் தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.ரவி சாஸ்திரி கூறியதாவது, “மூட்டை மூட்டையாய் மாட்டு சாணி இருக்கும் போது, அங்கு பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் மாட்டு சாணி என்று சொல்லும் போதே, நீங்கள் அந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்” என்று சாஸ்திரி தெரிவித்ததாக மிட்-டே செய்தி வெளியிட்டுள்ளது.இதற்கு முன்னர் ரவி சாஸ்திரி குடிப்பது குறித்த செய்திகள் வெளியான போது, நான் லெமன் ஜுஸ் குடித்தாலோ, பால் அல்லது தேன் குடித்தாலோ, எது குடித்தாலும் அதை என் பணத்தில் தான் குடிக்கிறேன் என்று பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது.

Sharing is caring!