பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

டெல்லி அணி வெற்றி… ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் கே.எல். ராகுல் 61 ரன்களும், மயங்க் அகர்வால் 69 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 92 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் 18 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

Sharing is caring!