தோனியின் புதிய மங்க் கெட்டப் இணையத்தில் செம வைரல்

தோனியின் செம கெட்டப்… இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இந்த புதிய மங்க் கெட்டப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோனி எப்போதும் தனது லுக்ஸை வெளிப்படுத்திக் கொள்வதில் ட்ரெண்ட் செட்டராக இருப்பார். அவர் ஒவ்வொரு முறையும் தனது லுக்ஸில் செய்யும் செஞ்ச் அவரது ஃபேன்ஸ் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெரும்.

இதேபோன்று தற்போது, தோனியின் புதிய அவதாரமாக தலையை மொட்டை அடித்து கொண்டு, தாடியை ஃபுல் சேவ் செய்து மங்க் போல் ஆடை அணிந்து, மிகவும் அமைதியான முகபாவத்துடன் வெளியிடப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

தோனியின் இந்த புதிய தோற்றம் பலருக்கும் ஒருவிதமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் டி20 போட்டி தொடர்பான விளம்பரத்திற்காக அவர் இந்த புதிய கெட்டப்பை போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!