8 விக்கெடுகள் வீழ்த்தியவரை ஊருக்கு அனுப்பி வைக்கும் இங்கிலாந்து அணி

இந்தியாவுடனான 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயீன் அலி கடைசி 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடாமல் இங்கிலாந்து திரும்புகிறார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்திருந்தாலும் மொயீன் அலி, பென் ஃபோக்ஸ் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கை தொடருக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தொடரில் மொயீன் அலி பங்கேற்கவில்லை.

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலும் அவர் விளையாடவில்லை. 18 மாதங்களுக்குப் பிறகு முதன்முதலாக இந்தியாவுடனான 2-வது டெஸ்டில் மொயீன் அலி விளையாடினார்.

இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி 2 இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக இரண்டு இன்னிங்ஸிலும் இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி விக்கெட்டை மொயீன் அலியே வீழ்த்தினார்.

இதுதவிர 2-வது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய அவர் 18 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த நிலையில், 24-ம் திகதி தொடங்கவுள்ள இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி பெயர் அதில் இடம்பெறவில்லை.

இந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அடுத்த ஆட்டத்தில் இடம்பெறாமல்போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sharing is caring!