“ஊரே BIRTHDAY’க்கு ‘வாழ்த்து’ சொன்னாலும், மனைவியோட ‘WISH’னா எப்பவும் ‘ஸ்பெஷல்’ தானே..” ‘காதலில்’ உருகி அன்பு ‘மனைவி’ போட்ட ‘POST’.. இணையத்தில் இப்போ செம ‘வைரல்’!!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் ஷர்மா (Rohit Sharma), இன்று தனது 34 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.‘ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மாவின் பிறந்தநாள் என்பதால், கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்கள் உள்ளிட்டோரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரோஹித் ஷர்மாவின் மனைவியான ரித்திகா சஜ்தே (Ritika Sajdeh), தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அன்பான கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தனது மகள் சமைரா மடியில், ரோஹித் ஷர்மா தலை வைத்து தூங்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த ரித்திகா, ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோ. எங்களது வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயம் நீங்கள் மட்டும் தான். நான் உண்மையாக சொல்கிறேன். உங்களுடன் இருக்கும் போது இந்த உலகமும் சிறந்த இடம் தான்’ என மிகவும் அன்பில் உருகி, தனது கணவரைக் குறித்து பிறந்தநாள் வாழ்த்தினை ரித்திகா பகிர்ந்துள்ளார்.

ரித்திகாவின் இந்த பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அதே போல, முகமது ஷமி, சாஹல், மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும், ரோஹித் ஷர்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில், மூன்றில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!