இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள்!

உலகளவில் பிரபலமாக உள்ள சில கிரிக்கெட் வீரர்கள் இருமுறை திருமணம் செய்துள்ளனர்.

அதாவது மனைவியுடன் விவாகரத்து பெற்று அல்லது மனைவி உயிரிழந்த நிலையிலும் கிரிக்கெட் வீரர்கள் இரண்டாவது மனைவியை கரம் பிடித்துள்ளனர்.

யோகராஜ்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை தான் யோகராஜ். இவர் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் மற்றும் ஆறு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். யோகராஜ் ஷப்னம் (யுவராஜின் தாய்) என்பவரை முதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார். பின்னர் சத்வீர் கவுர் என்னும் பெண்ணை மணந்து கொண்டார்.

தினேஷ் கார்த்திக்

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிகிதா என்பவரை முதலில் திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்த தினேஷ் அடுத்து இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

முகமது அசாருதீன்

இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் நவ்ரீன் என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்றவர். நவ்ரீனை 1996ல் விவாகரத்து செய்த அசாருதீன் பாலிவுட் நடிகை சங்கீதாவை இரண்டாவதாக 2010ல் திருமணம் செய்துக் கொண்டார்.

வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் அக்ரமின் முதல் மனைவி கடந்த 2009ல் உயிரிழந்து விட்டார். இதையடுத்து ஷனைர் தாம்சன் என்னும் பெண்ணை இரண்டாவதாக 2013ல் திருமணம் செய்து கொண்டார்.

Sharing is caring!