காதலியை பார்த்ததும் கட்டியணைத்து முத்தமழை பொழிந்த பிரபல வீரர்

சிட்னியில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ், கர்ப்பமான காதலியை கட்டித்தழுவி முத்தமிட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. போட்டி தொடங்குவற்கு 14 நாட்களுக்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வந்து, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, பின்னர் அணியில் இணைந்தனர்.

போட்டிகள் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட பயோ-பபுள் கட்டமைப்பையும் மீறி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள், சன் ரைசர்ஸ் அணி வீரர்கள், மேலும் சில கொல்கத்தா அணி வீரர்கள் என்று கொரோனா அடுத்தடுத்து பரவத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பிசிசிஐ, 31 ஆட்டங்கள் மீதமிருக்கும் போது, ஐபிஎல் போட்டிகளை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இதனைதொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் அவர்களது தாய்நாட்டுக்கு செல்ல முடிவெடுத்தனர், ஆனால் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல அந்நாட்டு அரசு தடைவிதித்திருந்ததால், மாலத்தீவு சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்ல வீரர்கள் முடிவு செய்தனர்.

கடந்த 15-ந்தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் சிட்னி சென்றடைந்தனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலியா கொரோனாவிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

இதனால் வீரர்கள் சிட்னி ஓட்டலில் தங்கியிருந்த, நிலையில் நேற்றுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்திய கெடு முடிவடைந்ததால் குடும்பத்துடன் இணைந்துள்ளனர்.

இதில் பேட் கம்மின்ஸை அவரது காதலியான பெக்கி பாஸ்டன் கட்டித்தழுவி வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது, விமான நிலையத்தில் இருந்து கம்மின்ஸ் வெளியே வந்த போது, அவரை ஓடிச் சென்று, பாஸ்டன் கட்டித் தழுவி கண்ணீருடன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள பேட் கம்மின்ஸ் காதலி தற்போது கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!