சென்னை சூப்பர் கிங்ஸ் அனுப்பிய கிப்ட்! பெருமையுடன் பதிவிட்ட இங்கிலாந்து வீராங்கனை..!!

பெண்களுக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீராங்கனையான கேட் கிராஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிப்ட் அனுப்பியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளான் Kate Cross மற்றும் Alex Hartley புகைப்படம் ஒன்று கடந்த மாதம் அதிக அளவில் பகிரப்பட்டது.

அதில், Alex Hartley கடந்த மாதம் 25-ஆம் திகதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தனக்கு பிடித்த அணி என்று அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பெங்களூரு அணியின் தோப்பியையும், Kate Cross தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிடிக்கும் என்று அதற்கான தோப்பியையும் அணிந்த படி போட்டிருந்தனர்.

அதன் படி அன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. அதை குறிக்கும் விதமாக Alex Hartley போட்டிருந்த டுவிட்டை பதிவு செய்து, ரவீந்திர ஜடேஜாவுக்கு நன்றி என்று கூறினார்.

ஏனெனில் அன்றைய போட்டியில் ஜடேஜா சிறப்பாக விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கினார். இப்படிப் பட்ட ஒரு வெளிநாட்டு ரசிகையை நாம் எப்படி விட முடியும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு அழகான கிப்ட் ஒன்றை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டி சார்ட், அதில் அவருடைய பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதை Kate Cross தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!