பார்க்கவே நல்லா இருக்கு: தமிழன் வருண்சக்ரவர்த்தியை புகழ்ந்து தள்ளிய கோலி

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் தோல்விக்கு பின் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, சுழற்பந்து வீச்சாளர் வருண்சக்ரவர்த்தியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், கோலி தலைமையிலான பெங்களூரு அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 19 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பின் ஆடிய கொல்கத்தா அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, தன்னுடைய மாயஜால சுழற்பந்து வீச்சு மூலம் 4 ஓவர் வீசி, 13 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெடுகள் வீழ்த்தி அசத்தினார்.

பெங்களூரு அணி வீரர்கள் இவரின் பந்து வீச்சை எதிர் கொள்ள கடும் சிரமப்பட்டனர். இது குறித்து போட்டி முடிந்த விராட் கோலி கூறுகையில், வருண்சக்ரவர்த்தியின்செயல்பாடு, இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய அடையாளம் என்று கூறுவேன்.

அவர் நிச்சயமாக இந்திய அணிக்காக விளையாடும் போது, அந்த போட்டியின்(வெற்றியின் போது) முக்கிய காரணமான வீரராக இருப்பார்.

இவரைப் போன்று அனைத்து இளம் வீரர்களிடம் இருந்து நாம் இதை பார்க்க வேண்டும், இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, இந்திய கிரிக்கெட் அணி இன்னும் வலுவாகவே உள்ளது.

எதிர்காலத்தில் அவர் இந்தியாவிற்காக விளையாடப்போகிறார். இது ஒரு சிறந்த அறிகுறி என்பதை கோலி கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கான தேர்வில் முக்கிய பங்கு வகித்தார்.

அதே போன்று இப்போது கோலியே அவர் இந்திய அணிக்கு எதிர்காலத்தில் விளையாடப்போகிறார் என்று கூறியுள்ளதால், வருண்சக்ரவர்த்திக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது உறுதி என்பது தெரிந்துவிட்டது.

ஏனெனில் இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு கோலி தான் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!