சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்! பிரபல நட்சத்திர வீரர் திடீர் அறிவிப்பு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வீரர் டுபிளெசிஸ் அறிவித்துள்ளார்.

36 வயதான டுபிளெசிஸ், தென் ஆப்பிரிக்காவுக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,163 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

தனது முடிவு தௌிவானது மற்றும் புதிய அத்தியாயத்திற்குள் கலாடி எடுத்து வைக்க இது சரியான நேரம் என ஓய்வு அறிக்கையில் டுபிளெசிஸ் குறிப்பிட்டுள்ளார்.

டுபிளெசிஸ் 2012 நவம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

டெஸ்ட் போட்டியில் 40.02 சராசரியுடன் 4,163 ஓட்டங்கள் எடுத்துள்ள டுபிளெசிஸ், 10 சதம் மற்றும் 21 அரைசதங்களை அடித்துள்ளார்.

டிசம்பர் 2020 Centurion மைதானத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 199 ஓட்டங்கள் குவித்ததே டெஸ்ட் கிரிக்கெட்டில் டுபிளெசிஸ் அடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.

36 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவராக செயல்பட்டுள்ள டுபிளெசிஸ், அதில் 18 போட்டிகளை வென்றுள்ளார்.

இனி டி-20 கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள டுபிளெசிஸ், ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Sharing is caring!