நான் இன்னும் போகல! அடுத்து வருடமும் CSK-க்கு ஆடுவதை உறுதி செய்த டோனி…

ஐபிஎல் தொடரின் அடுத்த ஆண்டும் டோனி சென்னை அணிக்காக விளையாடுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த ஆண்டு லீக் சுற்றோடு சென்னை அணி வெளியேறும் போது, அந்தணியின் கேப்டன் ஆன டோனி அடுத்த ஆண்டு நிச்சயமாக ஒரு வலிமையான அணியாக திரும்புவோம் என்று கூறியிருந்தார்.

அதே போன்று இந்த ஆண்டு ஒரு வலிமையான அணியாக வந்து, கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த தொடரில் டோனி சரியாக விளையாடாத காரணத்தினால், அடுத்த முறை நிச்சயமாக டோனி ஓய்வை அறிவித்துவிடுவார், ஐபிஎல் தொடரிலும் டோனியை பார்க்க முடியாது என்ற ரசிகர்கள் ஒரு வித ஏக்கத்தில் இருந்தனர்.

ஆனால், நேற்றைய போட்டி முடிந்த பின்பு தொகுப்பாளரான ஹர்ஷா போக்ளே டோனியிடன்,மிகப்பெரிய மரபை விட்டுச் செல்கிறீர்கள் என கேட்க, உடனே குறுக்கிட்ட டோனி நான் இன்னும் விட்டுச் செல்லவில்லை என்று முடித்தார்.

இதன் மூலம் டோனி அடுத்த முறையும் நிச்சயமாக சென்னை அணிக்கு விளையாடுவேன் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!