இப்படி போய் அவுட் ஆயிட்டேனே! அரை சதம் அடிக்காமல் வெளியேறிய விரக்தியில் ஓய்வறையில் கோலி செய்த செயல்…

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 44 ரன்களில் அவுட்டான கோலி ஓய்வு அறைக்கு சென்று தனது கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி வந்த கோலி அரைசதத்தை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக 44 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தான் ஆட்டமிழந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத விராட்கோலி ஆட்டமிழந்து வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்ற உடன் தான் ஆட்டமிழந்த விதம் குறித்து விரக்தியடைந்து தனது கோபத்தை வெளிப்படுத்தி சுவரில் குத்தினார்.

அவரது இந்த செயல் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலி அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!