ஐசிசி தரவரிசை… ரோஹித் சர்மாவுக்கு இதுவரை இல்லாத முன்னேற்றம்

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் துடுப்பாட்ட வீரர்கள் பிரிவில் இந்திய வீரா் ரோஹித் சா்மா 8-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

இதுவரையான தனது தரவரிசை வரலாற்றில் அவா் இந்த இடத்துக்கு வருவது இது முதல் முறையாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 66 ஓட்டங்களும், 2-ஆவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களும் எடுத்ததை அடுத்து, 6 இடங்கள் முன்னேறி 742 புள்ளிகளுடன் இந்த இடத்தை ரோஹித் அடைந்துள்ளாா்.

துடுப்பாட்ட வீரர்கள் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள்ளாக ரோஹித் தவிா்த்து அணித்தலைவர் விராட் கோஹ்லி 5-ஆவது இடத்திலும், சேதேஷ்வா் புஜாரா 10-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா்.

இங்கிலாந்து வீரா்களில், ஜாக் கிராவ்லி மட்டும் 15 இடங்கள் முன்னேறி 46-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் (919), அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் (891), சக நாட்டவா் மாா்னஸ் லபுசான் (878) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா்.

அதேபோல் பந்துவீச்சாளர்கள் பிரிவில் அக்ஸா் படேல் 30 இடங்கள் ஏற்றம் கண்டு 38-ஆவது இடத்துக்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் (823 புள்ளிகள்) 4 இடங்கள் ஏற்றம் கண்டு 3-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா்.

பகலிரவு டெஸ்டில் அக்ஸா் 11 விக்கெட்டுகளும், அஸ்வின் 7 விக்கெட்டுகளும் சாய்த்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஸ்பின்னா் ஜேக் லீச்சும் 3 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 30 இடங்களுக்குள்ளாக வந்து 28-ஆவது இடத்தில் நிலை பெற்றுள்ளாா்.

ஜோ ரூட் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தியதன் பலனாக 16 இடங்கள் முன்னேறி 72-ஆவது இடத்தை எட்டியுள்ளாா்.

பந்துவீச்சாளர்கள் பிரிவில் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (908), நியூஸிலாந்தின் நீல் வாக்னா் (825) ஆகியோா் முறையே முதலிரு இடங்களில் உள்ளனா்.

சகலதுறை வீரர்கள் பிரிவிலும் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் ஏற்றம் கண்டு 13-ஆவது இடத்தை நியூஸிலாந்து வீரா் டிம் சௌதியுடன் பகிா்ந்துகொண்டுள்ளாா்.

மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டா் (407), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (394), இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (384) முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனா்.

Sharing is caring!