ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்குத்தள்ளிய ரோகித் சர்மா

இந்த வருடத்தில் இதுவரை ஆறு சதங்கள் விளாசியுள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளில் மூன்று சதங்கள் விளாசியுள்ளார்.

இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்த கேன் வில்லியம்சன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், மார்னஸ் லாபஸ்சேன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

ரோகித் சர்மா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், விராட் கோலி 6-வத இடத்திற்கு சரிந்துள்ளார். பாபர் அசாம், டேவிட் வார்னர், டி காக், ஹென்றி நிக்கோலஸ் முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப்பின் பின் விராட் கோலி முதல் ஐந்து இடங்களுக்கு கீழ் சரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!