இலங்கை டி-20 கேப்டனாக நியமிக்கப்பட்ட நட்சத்திர வீரர் குறித்து வெளியான முக்கிய தகவல்!

இலங்கை டி-20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட தசூன் சானக்காவின் விசா பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கான ஒருநாள் மற்றும் டி-20 அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்தது. திமுத் கருணாரத்த ஒரு நாள் அணியின் கேப்டனாகவும், தசூன் சானக்க டி-20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

கிரிக்கெட் தொடரில் விளையாட 23ம் திகதி அதிகாலை இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டது.

விசா பெறுவது தொடர்பான பிரச்சினை காரணமாக டி-20 அணி கேப்டன் தசூன் சானக்க, அணியுடன் சேர்ந்து பயணம் செய்யவில்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, விசா பிரச்சினை காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து சானக்க விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக மேத்யூஸ் கேப்டனாக இலங்கை டி-20 அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியானது.

தற்போது சானக்க மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்க தேவைப்பட்ட பிரான்ஸ் விசாவை அவர் பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை டி-20 கேப்டன் தசூன் சானக்க, நாளை மறுநாள் பிரான்ஸ் விழியாக மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்க தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கான இலங்கை அணி தேர்வு பட்டியலில் அவர் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.

மார்ச் 3ம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் மேத்யூஸ் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி தோல்விடைந்தது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி-20 போட்டி மார்ச் 6ம் திகதி நடைபெறவுள்ளது.

Sharing is caring!