டெஸ்ட் போட்டியில் கெத்து காட்டும் இந்தியா! வெளியான ஐசிசி தரவரிசைப் பட்டியல்:

ஐசிசி டெஸ்ட் அணிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், இதில் இலங்கை அணி ஒரு இடம் பின் தங்கியுள்ளது.

உலகில் சர்வதேச அளவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரோ, ஒருநாள் தொடரோ அல்லது டி20 தொடரோ நடைபெற்றால், அந்த தொடர் முடிந்தவுடன், சர்வதேச அளவிலான அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிடும்.

அந்த வகையில், தற்போது ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா 121 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர் கொள்ளவுள்ள நியூசிலாந்து 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இதில் இங்கிலாந்து அணி மூன்று இடங்களில் முன்னேறி மூன்றாவது இடத்தையும், அவுஸ்திரேலியா அணி ஒரு இடம் பின் தங்கி நான்காவது இடத்தையும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளன. இலங்கை அணி ஒரு இடம் பின் தங்கி 78 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடுத்தடுத்த கடைசி இடத்தில் உள்ளன.

Sharing is caring!