உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக , இந்திய அணி வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18ம் தேதி தொடங்குகிறது . இந்த போட்டி சவுதாம்டனில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தனி விமானம் மூலமாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்து சென்றதும் 3 நாட்கள் ஹோட்டலில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தலில் இருந்தனர்.

அப்போது அந்த 3 நாட்களும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கேப்டன் விராட் கோலி, ஜடேஜா அஸ்வின் ,ரோகித் சர்மா உட்பட அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Sharing is caring!