சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்கா வீரரை 4-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் (91 கிலோ எடைக்கு மேல் உள்ள வீரர்கள்) பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.

ஒரு போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌன்-ஐ எதிர்கொண்டார். இதில் 4:1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சதீஷ் குமார் 30-27, 30-27, 28-29, 30-27, 30-26.

முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் தலா 10 புள்ளிகள் பெற்றார். 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றில் 3-வது நடுவர் தலா 9 புள்ளிகள் வழங்கினார்.

ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவ்-ஐ எதிர்கொள்கிறார்.

Sharing is caring!