இலங்கை ஜாம்பவான்கள் அணியை வீழ்த்திய இந்திய அணி! போட்டிக்கு பின் இலங்கை வீரர் வெளியிட்ட நெகிழ்ச்சி புகைப்படங்கள்

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இலங்கை ஜாம்பவான்கள் அணி வீரர் அர்னால்டு நெகிழ்ச்சியுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று இலங்கை ஜாம்பவான்கள் அணியும், இந்திய ஜாம்பவான்கள் அணியும் மோதின.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதற்கு பின்னர் இலங்கை ஜாம்பவான்கள் அணியை சேர்ந்த அர்னால்டு டுவிட்டரில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், #Srilankalegends ஐ திரைக்கு பின்னால் உயிர்ப்போடு வைத்திருக்க உதவிய இந்த நபர்களுக்கு நன்றி, இது மிகப்பெரியது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!