IPL-ல் இந்த அணியை வீழ்த்துவது கடினம்! தொடர் முடிந்த பின்பு ஷேன் வாட்சன் ஓபன் டாக்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பலம் வாய்ந்த அணி, வீழ்த்துவது கடினம் என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் சேஷன் வாட்சன் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

இதனால் மும்பை அணி மற்ற அணியைச் சேர்ந்த வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாட்சன் இது குறித்து கூறுகையில், எந்த கேள்வியும், சந்தேகமும் இல்லை மும்பை இந்தியன்ஸ் அணி அசுர பலம் கொண்ட அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலவீனம் என்பதே கிடையாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு பலவீனம் கூட இருப்பதாக எனக்கும் தெரியவில்லை. உலகின் தலைசிறந்த துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் டிகாக்கை வைத்திருப்பதே மும்பை அணிக்கு மிகப்பெரும் பலம்.

மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் மிக சிறப்பாக விளையாடினார். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் விளையாட இருக்கும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை.

அதே போல் இஷான் கிஷனும் மிக அருமையாக விளையாடினார், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் உலகத்தரம் வாய்ந்தவர்கள். வீழ்த்துவதற்கு கடினமான ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உருவெடுத்துள்ளது

Sharing is caring!