ஐபிஎல்! முதல் போட்டியில் CSK அணியில் இந்த 2 நட்சத்திர வீரர்கள் விளையாட மாட்டாங்க…

2021 ஐபிஎல் தொடரின் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி செப்டம்பர் 19-ஆம் திகதி முதல் நடைபெற உள்ளது. இந்த எஞ்சியுள்ள தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சிஎஸ்கே அணிவிளையாடவுள்ள இந்த முதல் போட்டியில் இரண்டு வீரர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி சென்னை அணியின் துவக்க வீரரான டூபிளெஸ்ஸிஸ் நிச்சயம் இந்த முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகின்றது. ஏனெனில் தற்போது கரீபியன் லீக் தொடரில் விளையாடி வந்த அவருக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை அவர் காயம் குணமடையாததால் நிச்சயம் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளையோ அல்லது இந்த முழு தொடரையோ அவர் தவற விட வாய்ப்புள்ளது. அதேபோன்று இங்கிலாந்து அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் தாமதமாக செப்டம்பர் 15ஆம் திகதி தான் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்தார்.

எனவே அவர் கட்டாயமாக 6 நாட்கள் குவாரன்டைன் இருக்க வேண்டும் என்கிற காரணத்தினால் 19ஆம் நாள் திகதி நடக்கும் முதல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று உறுதியாகியுள்ளது.

இரண்டு நட்சத்திர வீரர்கள் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது.

Sharing is caring!