ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்து! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா ANI ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெறவிருந்த 30வது போட்டியில் கொல்கத்தா – பெங்களூர் அணிகள் மோதவிருந்தன.

ஆனால் கொல்கத்தா அணியை சேர்ந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் சில முக்கிய வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல்லில் தொடர்புடைய பலருக்கும் கொரோனா பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து ஐபிஎல் தொடர் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில்  பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா இந்தாண்டு ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

Sharing is caring!