சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி…அடித்து துவைத்து காயப்போட்ட டெல்லி.. மொத்தமாக சொதப்பிய சிஎஸ்கே பவுலிங்: முதல் போட்டியில் படுதோல்வி

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் அதிரடி காட்டிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று டெல்லி- சென்னை அணிகளுக்கு இடையில் மும்பையில் நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதனையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய சென்னை அணியின் ரூத்துராஜ், டு பிளசிஸ் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதன்பின் ரெய்னா, மொயின் அலி, ராயுடு, ஜடேஜா, சாம் கரன் என்று அடுத்தடுத்து அதிரடியாக ஆடினார்.

யார் அவுட் ஆனாலும் பரவாயில்லை அடித்து வெளுப்போம் என்று திட்டம் போட்டு அடித்தனர். அதிலும் ரெய்னாவும், சாம் கரனும் திட்டமிட்டு அடித்து துவைத்தனர்.

ரெய்னா 36 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து ஜடேஜா(26), ராயுடு(23), மொயின் அலி(36)) என்று வரிசையாக கலக்கினார்.

கடைசியில் அதிரடி காட்டிய சாம் கரன் வெறும் 15 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் டெல்லிக்கு எதிராக முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 188 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பித்தில் இருந்து அதிரடி காட்டியது. டெல்லியின் ஒரு விக்கெட்டை வீழ்த்தவே சென்னை படாதபாடு பட்டது.

அதிரடியாக ஆடிய ப்ரித்வி ஷா 38 பந்தில் 72 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதோடு இன்னொரு பக்கம் தவானும் 77 ஓட்டங்கள் எடுத்து வெளுத்து வாங்கினார்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 138 ஓட்டங்கள் சேர்த்தனர். டெல்லி அணியின் ஸ்கோர் 167 ஆக இருக்கும்போது தவான் அவுட்டானார்.

அவர் 54 பந்துகளில் 85 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஸ்டாய்னிஸ் 14 ஓட்டங்களில் அவுட்டானார்.

இறுதியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Sharing is caring!