பும்ரா டெஸ்ட் போட்டியிலிருந்து விலக காரணம் இதுதானா?

திருமணம் என்பதால் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி உள்ளார் பும்ரா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்றன. குறிப்பாக, மூன்றாவது போட்டி இரு நாட்களுக்கும் குறைவான நேரத்திலேயே முடிவடைந்தது. இச்சூழலில் கடைசிப் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இப்போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தகுதிபெறுவதற்கான மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இக்கட்டான சூழலில் பும்ரா தனது சொந்தக் காரணங்களுக்காக வெளியேற்றுமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று பும்ராவை விடுவிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் மூலம் புகழ்பெற்று இந்திய அணிக்குள் நுழைந்து தவிர்க்க முடியாத வீரராக வலம்வருபவர் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா. இவருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அவருக்குக் கல்யாணம் நடக்கவிப்பதால் தான் போட்டியிலிருந்து விலகுகிறார் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவலும் உலா வருகிறது.

Sharing is caring!