ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆனார் ஜோகோவிச்

ஜோகோவிச் சாம்பியன்… ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ரஷியாவின் மெத்வதேவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரஷியாவின் மெத்வதேவை 7-5, 6-2, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். செர்பியாவின் ஜோகோவிச் பெறும் 18-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!