பங்களதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிலிருந்து விலகிய கேன் வில்லியம்ஸன்

நியுஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் பங்களதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவரது முழங்கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக நியுஸிலாந்து கிரிக்கட் அணியின் மருத்துவ முகாமையாளர் டேல் சாகில் தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நிலை தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களதேஸ் மற்றும் நியுஸிலாந்து அணிக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரானது எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!