கோடநாடு வழக்கில் பரபரப்பு: ஈபிஎஸ், சசிகலா தொடர்பான மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை !!

கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று பாதுகாவலர் ஓம்பகதூரைக் கொன்று கொள்ளை என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து நிலையில், உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும். காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத் தான் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி தொடர்பு பற்றி சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டது என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி, சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டால் இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்கும் என பரபரப்பு எழுந்துள்ளது.

Sharing is caring!