கோஹ்லியின் வியூகம் இந்த வெற்றிக்கு காரணம்! பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் கோஹ்லியின் வியூகம் தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் க்ரீம் ஸ்வான் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் நடைபெற்றது.

பகல்-இரவு டெஸ்ட் போட்டி என்பதால், இப்போட்டியை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் ஆட்டம் இரண்டே நாளில் முடிந்துவிட்டது. இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசிய போது, முன்னணி கிரிக்கெட்டர் பலர் மைதானத்தை குறை கூறினர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மைதானமே கிடையாது என்ற அளவிற்கு குறை கூறினர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான க்ரீம் ஸ்வான், கோஹ்லி ஆரம்பம் முதலே சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றவகையில் சிறப்பான பீல்ட்டிங்கை நாலா பக்கமும் அமைத்திருந்தார்.

ஸிலிப் , கவர் , லாங் ஆன் என அனைத்து திசையிலும் பம்பரமாக நின்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். கோஹ்லியின் வியூகம் சரியாக அமைந்தது. இந்தியாவிற்கு எனது பாராட்டுக்கள் என்று பாராட்டியுள்ளார்.

Sharing is caring!