மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்ட மும்பை வீரர் க்ருணல் பாண்ட்யா?

மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான க்ருணல் பாண்ட்யாவின் செயல், ரசிகர்கள் பலரையும் கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய 24-வது ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மும்பை அணி சார்பில் இஷான் கிஷனுக்கு பதிலாக, ஒரு பந்து வீச்சாள குல்டர் நைல் சேர்க்கப்பட்டார்.

இதனால் பேட்டிங் ஆர்டரில் க்ருணல் பாண்ட்யா முன் வரிசையில் இறங்கினார். குயிண்டன் டி காக்குடன் சிறப்பான பார்ட்னர் ஷிப் அமைத்து கொடுத்தார். 23 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகினார்.

இவரது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியிருந்தாலும், இந்த போட்டியின் போது அவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் இடையில், க்ருணல் பாண்ட்யாவிற்கு moisturizer-ஐ அந்தணி வீரர் Anukul Roy கொண்டு வந்து கொடுத்தார்.

அப்போது அதை வாங்கி கையில் போட்டுக் கொண்ட அவர், உடனடியாக அதை கண்டுகொள்ளாமல், அப்படியே தூக்கி வீசினார்.

சக வீரர் ஒருவருக்கு மரியாதை கூட கொடுக்க தெரியாதா? இப்படி தான் செய்வீர்களா? என்று க்ருணல் பாண்ட்யாவை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை ஒரு சிலர் அவரின் தலைக்கனத்தை காட்டுகிறது என்றும் கூறி வருகின்றனர்.

Sharing is caring!