15.5 கோடிக்கு வாங்கப்பட்ட நட்சத்திர வீரர் புலம்பல்

ஐபிஎல் ஏலம் பெரிய நெருக்கடியை, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் பேட் கமின்ஸ் கூறியுள்ளார்.

பேட் கமின்ஸ் கடந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 15.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.

கடந்த ஆண்டு வரை ஐபிஎல் ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரர் அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்ட சாதனை இவரிடம்தான் இருந்தது.

ஆனால் இவரால் சரியாக கடந்தாண்டு தொடரில் சோபிக்க முடியவில்லை.

இது குறித்து பேசிய கமின்ஸ், ஐபிஎல் ஏலமே இப்போது பெரிய நெருக்கடியை, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால், நான் தொடர்ந்து என்னால் என்ன பெஸ்ட்டைக் கொடுக்கமுடியும் என்றுதான் சிந்திக்கிறேன்.

ஒரு போட்டியில் சரியாகப் பந்துவீசவில்லை என்றால்கூட அது பெரும் அழுத்தமாகி விடுகிறது. அடுத்தப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டே ஆகவேண்டும் என்கிற நெருக்கடி ஏற்படுகிறது என கூறியுள்ளார்.

Sharing is caring!