3வது டி-20 போட்டியில் மீண்டு வருவோம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் நம்பிக்கை

நாங்கள் மீண்டு வருவோம்… இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், நாங்கள் மீண்டு வருவோம் என்று பேசியுள்ளார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய்.

நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி-20 போட்டிகளிலும், முறையே 49 மற்றும் 46 ரன்களை அடித்து தனது ஃபார்மை நிரூபித்து வருகிறார் ஜேசன் ராய்.

அவர் கூறியுள்ளதாவது, ‘இரண்டாவது போட்டியின் தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம். இந்தியா ஒரு வலுவான அணிதான். அதேசமயம், இரண்டாவது போட்டியில் அவர்கள் எங்களுக்கு செய்ததைவிட, முதல் போட்டியில் நாங்கள் அவர்களுக்கு மோசமான தோல்வியை பரிசளித்தோம்.

இரண்டாவது போட்டியின் கடைசி 8 ஓவர்களில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டோம். நாங்கள் விரைவாக கற்றுக்கொள்ளும் ஒரு அணியாக இருப்பதால், எங்களால் மூன்றாவது போட்டியில் எளிதாக திருப்பியடிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றுள்ளார்.

Sharing is caring!