வெளுத்து வாங்கும் மும்பை இந்தியன்ஸின் புதிய வீரர்! ஐபிஎல் துவங்குவதற்கு முன்பே மாஸ் காட்டிய சம்பவம்

மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலர் மிரட்டி வெற்றி தேடித் தந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேற்கிந்திய தீவில் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் தொடரான Caribbean Premier League போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான இந்த தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் திகதி துவங்கி, நேற்றோடு முடிவடைந்தது.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், Andre Fletcher தலைமையிலான St Lucia Kings அணியும், Dwayne Bravo தலைமையிலான ST KITTS AND NEVIS PATRIOTS அணியும் மோதின.

முதலில் ஆடிய St Lucia Kings அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் ஆடிய ST KITTS AND NEVIS PATRIOTS அணி, கடைசி ஓவரின் கடைசி பந்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Sharing is caring!