முத்தையா முரளிதரன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி… இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் இல் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Sharing is caring!