என் மனசே உடஞ்சு போச்சு… ஒரு ரன்னில் RCB-யுடனான தோல்வி குறித்து பேசிய ஹிட்மயர்

பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் தோல்வியின் போது, என் மனது உடைந்து போய்விட்டதாக அதிரடி மன்னன் ஹிட்மயர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில், பெங்களூரு-டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் டெல்லி அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெற்றியின் அருகில் வந்து தோல்வியை சந்தித்ததால், டெல்லி அணி வீரர்களால் இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இப்போட்டியில் டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹிட்மயர் 53 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த தோல்வி குறித்து அவர் கூறுகையில், தங்களது அணி வெற்றிக்காக கடினமாக போராடியது.

வெற்றிக்கு அருகில் சென்றது மகிழ்ச்சி. கிரிக்கெட்டில் இது போன்று எல்லாம் நடக்கும். சில போட்டிகளில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்கும். இருப்பினும் இந்த தோல்வி என் மனதையே உடைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

Sharing is caring!