இங்கிலாந்து அணியில் புதிய கேப்டன் அறிவிப்பு!

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான்மோர்கன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வித தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் மற்றும் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இரண்டு தொடரையும் இந்தியா கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த இயன் மோர்கன் இந்திய அணிக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயன் மோர்கன் விலகியதால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் அந்த அணியின் சீனியர் வீரரும், விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் வழிநடத்த உள்ளார்.

Sharing is caring!