ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்: சீனா ஆதிக்கம்- 3-வது இடத்திற்கு பின்தங்கியது ஜப்பான்

அமெரிக்கா 19 தங்கத்துடன் 52 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் இருக்கும் நிலையில், போட்டியை நடத்தும் ஜப்பான் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் போட்டியை நடத்தும் ஜப்பான் பதக்கப்பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்தது. அதன்பின் சீனா, அமெரிக்க நாடுகள் ஆதிக்கம் செலுத்தின.

தடகள போட்டிகள் தொடங்கியதும் சீனா, அமெரிக்கா இடையே பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சீனா 22 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தமாக 47 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

அமெரிக்கா 19 தங்கம், 20 வெள்ளி, 13 வெண்கலம் என 52 பதக்கங்கள் வென்று 2-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

ஆஸ்திரேலியா 13 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 11 தங்கத்துடன் 5-வது இடத்திலும், கிரேட் பிரிட்டன் 9 தங்கத்துடன் 6-வது இடத்திலும் உள்ளன.

இந்தியா ஒரு வெள்ளியுடன் 61-வது இடத்தில் உள்ளது.

Sharing is caring!